ஐபிஎல் 2020 அட்டவணை வெளியானது! முதல் போட்டியில் சென்னை அணியை சந்திக்கிறது மும்பை அணி..!

இந்தாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அபுதாபியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொள்கிறது.

இந்த வருடத்தின் ஐபிஎல் டி20 வரும் 19ம் தேதி ஐக்கிய அமீரகத்தில் தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தற்போது அங்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு வருடமும் போட்டி தொடங்குவதற்கு முன்பாக வெகுவிரைவில் அட்டவணை வெளியிடப்படும்.

ஆனால் அபுதாபி, துபாய், சார்ஜா போன்ற இடங்களில் இம்முறை போட்டி நடைபெற உள்ளதால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டிய சூழலில் ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு எந்த ஒரு தடையும் இல்லாமல் வீரர்கள் சென்று வருவதற்கு ஒப்புதல் வாங்க வேண்டியது அவசியமாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்புதான் அந்த அனுமதி கிடைத்துள்ளது.

இதனிடையே சிஎஸ்கே அணியை சேர்ந்த சிலர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கான போட்டியை எப்போது நடத்துவது என்பது குறித்து நெருக்கடியும் உருவானது. அவர்கள் குணமடைந்த நிலையில் இந்தாண்டுக்கான  ஐபிஎல் போட்டியின் கால அட்டவணை இன்று வெளியாகும் என்று ஐபிஎல் சேர்மன் கூறி இருந்தார்.

இந்த நிலையில், போட்டி அட்டவணையை தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே அறிவித்தபடி, 9-ம் தேதி அபுதாபியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும்,மோதுகின்றன.

அபுதாபியில் நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x