கடைசி நாளில் வெற்றி பெறுமா இங்கிலாந்து அணி?:

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் பாகிஸ்தான் அணி, தனது 2-வது இன்னிங்ஸில் 56 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்றது இங்கிலாந்து அணி. அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. 2-வது டெஸ்ட் டிரா ஆனது.3-வது டெஸ்ட் செளதாம்ப்டனில் நடைபெறுகிறது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 583 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்பிறகு விளையாடிய பாகிஸ்தான் அணி, 3-ம் நாள் இறுதியில் தனது முதல் இன்னிங்ஸில் 273 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபோலோ ஆன் ஆனது. கேப்டன் அசார் அலி 141 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்தின் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் 4-ம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி, தனது 2-வது இன்னிங்ஸில் 56 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி இன்னும் 210 ரன்கள் பின்தங்கியுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x