மத்திய அரசின் அலட்சியம் ஆபத்தானது: ராகுல் காந்தி

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசு எந்தவித திட்டமிடலும் இன்றி இருப்பது, மிகப்பெரிய ஆபத்திற்கு வழிவகுக்கும் என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளமான டுவிட்டரில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு:

கொரோனா தடுப்பூசியை கையாள்வது குறித்த திட்டத்தை மத்திய அரசு இந்நேரம் வகுத்திருக்க வேண்டும். ஆனால் அதற்கான அறிகுறிகள் கூட இதுவரை தோன்றவில்லை.  மத்திய அரசின் இந்த ஆயத்தமற்ற நிலை ஆபத்தானது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இத்துடன், கொரோனா தடுப்பூசி, பாரபட்சமின்றி மலிவான விலையில் கிடைக்கத் தேவையான திட்டங்களை வகுக்க வேண்டுமென, கடந்த 14-ம் தேதி தான் வெளியிட்ட பதிவையும் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x