“பசுவின் சாணத்தில் பிறந்த தன் அருகில் கூட கொரோனா வராது” ம.பி. பாஜக பெண் அமைச்சர் தகவல்!

பசு மாட்டின் சாணத்தில் பிறந்ததால் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று வராது என்று மத்தியப்பிரதேச பாஜக பெண் அமைச்சர் இமர்தி தேவி தெரிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலத்தின் பெண்கள் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சராக இருப்பவர் இமர்தி தேவி. சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் தனக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி இவர் எழுந்து சென்றுள்ளார். இதையடுத்து, அவருக்கு கொரோனா தொற்று என்று வதந்தி பரவியது.

தற்போது அவருக்கு கொரோனா இருப்பதாக வெளியான செய்தி குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் இமர்தி தேவி, ”நான் பசுமாட்டு சாணத்தில் பிறந்தவள். ஆதலால் என்னை கொரோனா தாக்காது. மேலும் நான் மாஸ்க் அணியாமல் வெளியே செல்வதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பாக அப்பளம் சாப்பிட்டால் கொரோனா குணமாகி விடும் என்று மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்து இவரைப் போலவே அசாம் அமைச்சர் சுமன் ஹரிப்பிரியாவும் பசுமாட்டு சாணம், பசுமாட்டு மூத்திரம் இரண்டும் கொரோனாவை கட்டுப்படுத்த உதவும் என்று தெரிவித்து இருந்தார்

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x