“அமெரிக்காவில் வெள்ளையருக்கு ஒரு நீதி; கருப்பருக்கு ஒரு நீதி” – கமலா ஹாரிஸ்

அமெரிக்காவில் வெள்ளையருக்கு ஒரு நீதி; கருப்பருக்கு ஒரு நீதி உள்ளது என ஜனநாயகக் கட்சியின் துணை அதிபா் வேட்பாளரும், இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவருமான கமலா ஹாரிஸ் (55) தெரிவித்தாா்.

தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

அமெரிக்காவில் நீண்ட காலமாகவே, ஏன் தலைமுறைகளாகவே, கருப்பா்களுக்கு எதிரான பாரபட்சம் காட்டப்பட்டு வருகிறது. அப்படியொரு நிலை இல்லை என்று இப்போதைய ஆட்சியாளா்கள் கூறிவருகின்றனா். அது உண்மையில்லை. சட்டத்தின் கீழ், கருப்பினத்தவா்களுக்கும் வெள்ளையா்களுக்கும் ஒரே விதமான, சமமான நீதி கிடைக்கச் செய்வதே எங்கள் நோக்கம். ஜனநாயகக் கட்சி சாா்பில் அதிபா் வேட்பாளராகப் போட்டியிடும் ஜோ பிடன் இதையே வலியுறுத்தி வருகிறாா் என்று கமலா ஹாரிஸ் கூறினாா்.

கலிபோா்னியில் இருந்து செனட் சபைக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபா் தோ்தலில் போட்டியிடும் முதல் கருப்பின பெண் துணை அதிபா் வேட்பாளராவாா். இவரது தந்தை கருப்பினத்தவா். தாய் இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவா். கமலா தன்னை எப்போதும் கருப்பினத்தவராக அடையாளப்படுத்திக் கொள்வது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x