சசிகலாவின் ரூ.300 கோடி சொத்துக்கள் முடக்கம்..!

2017ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது. மேலும் அவர்களது சொத்துக்களை அரசுடமையாக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

தற்போது தண்டனைக் காலம் முடிந்து சசிகலா, இளவரசி விடுதலையாகியுள்ள நிலையில், அவர்களது சொத்துக்களை அரசு கையகப்படுத்தி வருகின்றது. இதில் முதற்கட்டமாக சசிகலாவின் சொந்த ஊரான திருவாரூர் அருகே, 34 ஏக்கர் 24 சென்ட் பரப்பளவில் ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் என்ற பெயரில் இயங்கி வந்த மாடர்ன் ரைஸ் மில்லை அரசுடைமையாக்கி, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

இதுவரை இளவரசி, சுதாகரன் சொத்துகள் மட்டும் அரசுடைமையாக்கப்பட்டு வந்த நிலையில் முதல்முறையாக சசிகலாவின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x