குரங்கை தூக்கிலிட்டு கொன்ற கொடூரர்கள்
தெலுங்கானாவில், குரங்குங்களின் தொல்லையை சமாளிக்க, குரங்கு ஒன்றை பிடித்து தூக்கிலிட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் அம்மா பாளையம் என்ற கிராமத்தில் வசிப்பவர் வெங்கடேஸ்வர ராவ். இவரது வீட்டில் உள்ள குடிநீர்த் தொட்டியில் கும்பலாக குரங்குகள் வந்து தண்ணீர் குடித்து செல்வது வழக்கம். இவற்றின் தொல்லையை கட்டுப்படுத்த முடிவு செய்த அவர், குரங்கு ஒன்றுக்கு தூக்கு தண்டனை வழங்க முடிவு செய்தார். கூட்டத்திலிருந்த குரங்கு ஒன்றை, பொறி வைத்து பிடித்து வெங்கடேஸ், மற்ற குரங்குகளின் முன்னிலையில் அவற்றை துன்புறுத்தினார். மேலும், சித்திரவதை செய்து ஒரு மரக் கிளையில் தூக்கிட்டுக் கொன்றுள்ளார். மேலும் அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டும் உள்ளார்.
இந்த வீடியோ கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எனினும் குரங்கினை சித்திரவதை செய்து கொலை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாக இதுவரை தகவல் வெளியாகவில்லை.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்தபோது, “வெங்கடேஸ்வர் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜோசப் என்பவர்தான் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார் “என்பது தெரியவந்தது. அதாவது ஒரு குரங்கைக் கொன்றுவிட்டால், வேறு குரங்கள் இந்த பக்கம் வராது எனத் திட்டம் போட்டே இதை செய்துள்ளனர்.