திமுக பொதுச்செயலாளர், பொருளாளராக ஒருமனதாக தேர்வான துரைமுருகன் மற்றும் டி.ஆர்.பாலு!

திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் கட்சியின் துணை பொதுச் செயலாளர்களாக பொன்முடி, ஆ.ராசா ஆகியோர் பொதுக்குழு கூட்டம் நியமிக்கப்பட்டனர்.
திமுக பொதுக்குழு கூட்டம் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்று வருகிறது.. கொரோனா தாக்கத்தால் முதன்முறையாக காணொலி மூலம் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில், திமுக பொதுச்செயலாளராக போட்டியிட்ட துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
இதேபோன்று, திமுகவில் ஏற்கனவே ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் துணைப் பொதுச்செயலாளர்களாக உள்ள நிலையில், பொன்முடி, ஆ.ராசா ஆகியோரையும் நியமிக்கப்பட்டதன் மூலம் திமுகவில் துணைப் பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கை 3ல் இருந்து 5ஆக உயர்ந்தது