“துர்கா பூஜை இல்லை என்று கூறியதை நிரூபித்தால் மக்கள் முன்னிலையில் நான் 100 தோப்புக்கரணம் போடுகிறேன்”?? – மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநிலத்தில், இந்த ஆண்டு துர்கா பூஜை கொண்டாட்டங்கள் இல்லை என்று கூறியதாக சொல்வதை நிரூபித்தால் மக்கள் முன்னிலையில் 100 தோப்புக்கரணம் போடுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

துர்கா பூஜை குறித்து அரசியல் கட்சிகள் பல்வேறு விதமான புரளிகளைப் பரப்பி வருகின்றன. ஆனால், அதுபற்றி முடிவு செய்ய இதுவரை எந்த கூட்டமும் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு துர்கா பூஜை இல்லை என்று மேற்கு வங்க அரசு கூறியதாக நிரூபித்தால், மக்கள் முன்னிலையிலேயே நான் 100 தோப்புக்கரணம் போடுகிறேன் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. அதுபோன்ற போலியான சமூக வலைத்தளப் பக்கங்கள் குறித்து விசாரிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களை தோப்புக்கரணம் போட வைக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x