“புதிய கல்விக் கொள்கையின் மூலம் நம் நாட்டின் கல்வி முறை சர்வதேச தரத்திற்கு வலுப்பெறும்” – பிரதமர் மோடி நம்பிக்கை!

டெல்லியில், மத்திய கல்வி அமைச்சகமும். பல்கலைக்கழக மானிய குழுவும் இணைந்து புதிய கல்வி கொள்கையின் கீழ் உயர் கல்வியில் புதிய சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்று, காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது, “மாற்றத்துக்கான மிக முக்கியமான கருவியாக புதிய கல்வி கொள்கை இருந்து வருகிறது. கல்வித்துறை முன்னேற்றத்திற்கு சீர்திருத்தம் மட்டுமே ஒரே வழி என்றும், எதிர்காலத்திற்கு இளைஞர்கள் தயாராக உள்ளதாகவும், கல்வி மற்றும் திறன் மூலம் இளைஞர்களை வலுப்படுத்த வேண்டும் என்று கூறிய அவர்,  மாணவர்கள் சிந்திப்பதை நாம் ஊக்கப்படுத்த வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

“தொழில்நுட்பத்தின் மூலம் நாம் சமூகத்தின் கடைக்கோடியில் இருக்கும் மாணவர் வரை கல்வியை கொண்டு செல்ல முடியும் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு இடையேயான இடைவெளியை குறைக்க முடியும் ஆய்வு செய்வதிலும் அதை செயல்படுத்துவதிலும் உள்ள இடைவெளியை புதிய கல்விக் கொள்கை குறைக்கிறது.

கடந்த காலத்தில் ஆர்வம், திறமை, தேவை போன்றவை மதிப்பிடப்படவே இல்லை. மாணவர்கள் நலனுக்காக பட்டயப் படிப்புகள் 2 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளன. புதிய கல்விக் கொள்கை பெரும் மாற்றத்தை ஏற்படுத்த கூடிய கருவியாகும். பாதியில் படிப்பை நிறுத்தியவர்கள் புதிய கல்விக் கொள்கையால் படிப்பை தொடரலாம்  மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்த தேவையில்லை.

தாய்மொழி கல்வி மூலம் மாணவர்களின் அடித்தளம் சிறப்பாக இருக்கும்  இந்தியாவை வலுவான நாடாக உருவாக்க, புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும். நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய கல்வி கொள்கையானது மாற்றத்துக்கான மிக முக்கியமான கருவி என்றும், இந்தியாவை வலுவான நாடாக உருவாக்குவதற்கும் வளர்ச்சியை அதிகரிக்கவும் புதிய கல்விக்கொள்கை அவசியம்” எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

அதோடு, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் எந்த வித பாகுபாடும் இல்லாததால், கல்வித்துறையில் கொண்டு வரப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தத்தை கண்டு சிலர் அஞ்சுவதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x