இந்திய விமானப்படையில் சர்வமத பூஜையுடன் இணைக்கப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள்!

பிரான்ஸிலிருந்து முதற்கட்டமாக இந்தியா வரவழைக்கப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள் இன்று முறைப்படி இந்திய விமானப்படையுடன் இணைக்கப்பட்டது.
போர்க்களத்தில் குறிவைத்த இலக்கை அசராது தாக்கும் அதிதசக்தி கொண்ட ரஃபேல் விமானங்களை வாங்க, கடந்த 2016ஆம் ஆண்டு 59 ஆயிரம் கோடி செலவில் 36 விமானங்களை வாங்க ரஷ்யாவிடம் இந்தியா ஒப்பந்தமிட்டது. இதில் 5 விமானங்கள் மட்டும், எல்லைப் பகுதியில் பாதுகாப்பு காரணமாக கடந்த ஜூலை 29 ஆம் தேதி ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த அதீத வலிமை மிக்க ரஃபேல் விமானத்தை ஆகஸ்ட் 15ஆம் தேதி விமானப் படையில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் பல்வேறு காரணங்களால் விமானப்படையில் சேர்ப்பதற்கு காலதாமதமானது.
இந்நிலையில், ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் 5 ரபேல் விமானங்களும் பாரம்பரிய சர்வ தர்ம பூஜையை தொடர்ந்து இந்திய விமானப்படையின் 17 வது படைப்பிரிவான தங்க அம்புகள் (Golden Arrows) பிரிவில் சேர்க்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் நாட்டு பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி, முப்படைத் தளபதி விபின் ராவத், விமானப்படை தலைமைத் தளபதி ஆா்.கே.எஸ்.பதௌரியா, பாதுகாப்புத் துறை செயலா் அஜய் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றுள்ளனர். மேலும், பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் அதிகாரிகளும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிகழ்ச்சியின்போது ரஃபேல் போா் விமானங்கள், தேஜஸ் போா் விமானங்கள் உள்ளிட்டவை மூலமாக விமானப்படை வீரா்கள் சாகசங்களில் ஈடுபட்டுள்ளதாக, இந்திய விமானப்படையின் செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளாா்.