பிரபல சின்னத்திரை காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்!

நடிகர் வடிவேல் பாலாஜி(45) உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.
சின்னத்திரையில் கலக்கப் போவது யார், அது இது எது உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமடைந்தவர் வடிவேல் பாலாஜி. திரைப்படங்களிலும் காமெடி நடிகராக நடித்து வந்த வடிவேல் பாலாஜி 15 நாட்களுக்கு முன்னர் திடீர் மாரடைப்பு காரணமாக இரு கைகளும் வாதம் ஏற்பட்டு முடங்கி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
தொடர் சிகிச்சைக்குப் பின்னர் போதிய வசதி இல்லாத காரணத்தால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி வடிவேல் பாலாஜி உயிர் பிரிந்தது. 45 வயதான வடிவேலு பாலாஜிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
கலக்கப் போவது யாரு, அது இது எது உள்ளிட்ட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதன்மூலம் புகழ்பெற்ற வடிவேல் பாலாஜி, நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பாணியைப் பின்பற்றி நடித்ததால் அதிகக் கவனம் பெற்றார். அவரின் மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.