ஒரு ரூபாய்க்கு 24 கேரட் தங்கமா???

தீபாவளி பண்டிகையை யொட்டி, வாடிக்கையாளர்களுக்கு மொபைல் ஆப் மூலமாக ஒரு ரூபாயிக்கு தங்கம் விற்பனை செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது பாரத் பே நிறுவனம்.

ஆன்லைன் மின்னணு வர்த்தக நிறுவனமான பாரத் பே, ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளுக்கான செயலியை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.வரும் தீபாவளி பண்டிகையை யொட்டி, பாரத் பே நிறுவனம் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. அதில் குறிப்பாக, மிகக் குறைந்த விலையில் தங்கம் வாங்கி விற்பது.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்லும் நிலையில், தங்கத்தில் செய்யும் முதலீடு மிகவும் பாதுகாப்பானது என கருதப்படுகிறது.24 கேரட் தங்கம் வெறும் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வாடிக்கையாளர் ஒருவர் எப்போது வேண்டும் என்றாலும் தங்கத்தை வாங்க முடியும், அதே போல விற்கவும் முடியும்.

தங்கத்துக்கான பணத்தை பாரத் பே செயலி மூலம் அல்லது மற்ற யூபிஐ முறைகளில் பணம் செலுத்தலாம்.வாடிக்கையாளர்கள் தங்கத்தை வாங்கிய பிறகு ‘பாரத் பே கோல்டு’ பிரிவின் கீழ் தங்கம் சேமிக்கப்படும். ஜிஎஸ்டி உள்ளிட்ட சலுகைகளும் இதில் அடங்கும்.

வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கில் எவ்வளவு தங்கம் உள்ளது என்பதை செல்போன் செயலி மூலம் செக் செய்து கொள்ளவும் முடியும். தற்போது, நவீன டிஜிட்டல் முறையில், தங்கத்தை வாங்குவதும் சரி, விற்பதும் சரி மிகவும் எளிதானது. பாதுகாப்பானது.

சேஃப் கோல்டு என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த சேவையை பாரத் பே நிறுவனம் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்ன என்னங்க… தங்கம்னா சும்மாவா…. !

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x