60 வயது பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு இளைஞர்கள் கைது!

உத்திரபிரதேச மாநிலமத்தில் கோவிலுக்கு சென்றுக் கொண்டிருந்த 60 வயது பாட்டியை இரண்டு இளைஞர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் சித்தார்த் மாவட்டம் சோரட்கர் பகுதியை சேர்ந்த 60 வயது பாட்டி ஒருவர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த பார்லிகன் மற்றும் ராமு என்ற இரண்டு இளைஞர்கள் மதுபோதையில் அந்த வழியாக வந்தனர்.
அப்போது அந்த பாட்டியிடம் பிரச்னை செய்த இருவரும் அவர் வாயில் துணியை வைத்து அழுத்தி தூக்கி சென்று, மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்தனர். இதையடுத்து அந்த பாட்டி கோமா நிலைக்கு செல்ல இருவரும் அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பாட்டியை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். இரண்டு நாட்கள் சிகிச்சை அளித்த பிறகு பாட்டி இயல்பு நிலைக்கு திரும்பினார்.
அப்போது அவர் இரண்டு இளைஞர்கள் குடிபோதையில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தியதாக காவலர்களிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சோரட்கர்போலீசார் குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏதிர்பாராத இந்த சம்பவத்தால் நிலைகுலைந்த அந்த பாட்டி தற்போது தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.