யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரில் அரையிறுதி போட்டியோடு வெளியேறிய செரினா வில்லியம்ஸ்!

யு.எஸ்., ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் செரினா வில்லியம்ஸ் விக்டோரியா அசரன்காவிடம் 6-1, 3-6, 3-6 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், பெலாரசின் விக்டோரியா அசரன்கா மோதினர். முதல் செட்டை 6-1 எனக் கைப்பற்றிய செரினா, 2வது செட்டை 3-6 என இழந்தார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் இவரது இடது கணுக்காலில் தொந்தரவு ஏற்பட ‘மெடிக்கல் டைம்அவுட்’ எடுத்துக் கொண்டார். சிறிது நேரத்திற்கு பின் மீண்டும் களமிறங்கிய செரினா, 3வது செட்டை 3-6 எனக் கோட்டைவிட்டார். முடிவில் செரினா 6-1, 3-6, 3-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

இதன்மூலம் செரினாவின் 24வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் வாய்ப்பு முடிவுக்கு வந்தது. அபாரமாக ஆடிய அசரன்கா, யு.எஸ்., ஓபனில் 3வது முறையாக (2012, 2013, 2020) பைனலுக்கு முன்னேறினார். முன்னதாக விளையாடிய 2 பைனலில் செரினாவிடம் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்திருந்தார். தவிர இவர், கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 5வது முறையாக பைனலுக்குள் நுழைந்தார்.

மற்றொரு அரையிறுதியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, அமெரிக்காவின் ஜெனிபர் பிராடி மோதினர். இதில் ஒசாகா 7-6, 3-6, 6-3 என, வெற்றி பெற்று யு.எஸ்., ஓபனில் 2வது முறையாக (2018, 2020) பைனலுக்கு தகுதி பெற்றார். கடந்த 2018ல் நடந்த பைனலில் அமெரிக்காவின் செரினாவை வீழ்த்தி கோப்பை வென்றிருந்தார். தவிர இவர், கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 3வது முறையாக பைனலுக்கு முன்னேறினார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x