மதுரையில் யாசகர் தந்த அதிர்ச்சி.. 12 வது முறையாக ரூ.10 ஆயிரம் நிதி!!

மதுரையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக துாத்துக்குடி யாசகர் பூல்பாண்டியன் 65, மதுரை கலெக்டர் வினய்யிடம் நேற்று 12வது முறையாக ரூ.10 ஆயிரம் நிதி வழங்கினார். இதுவரை ரூ.1.20 லட்சம் வழங்கியுள்ளார்.

துாத்துக்குடி ஆலங்குளத்தை சேர்ந்த பூல்பாண்டியன் திருமணமான சில ஆண்டுகளில் மும்பை சென்றார். அங்கு வேலை கிடைக்காததால் யாசகம் எடுக்க துவங்கினார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு திரும்பிய அவரை குடும்பத்தினர் ஏற்க மறுத்தனர். இதனால் யாசகத்தை தொடர்ந்தார்.

கொரோனா ஊரடங்கால் மதுரை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் தங்கி யாசகம் எடுத்து வந்தார். இதில் உணவு செலவு போக மீதமாகும் தொகையை கொரோனா நிவாரணத்திற்கு வழங்கி வந்தார். ஏப்., முதல் ஜூலை வரை ரூ.10 ஆயிரம் வீதம் 11 முறை வழங்கினார். நேற்று 12வது முறையாக ரூ.10 ஆயிரத்தை கலெக்டர் வினய்யிடம் வழங்கினார்.

அவர் கூறுகையில், ”கொரோனாவால் யாரும் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக யாசகத்தில் கிடைத்த தொகையை வழங்கினேன். தற்போது பஸ் போக்குவரத்து துவங்கியதால் வெளியூர் செல்கிறேன். என் சமூக சேவை தொடரும்,” என்றார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x