விக் வைத்து 5 ஆண்டுகளாக ஏமாற்றிய கணவர்.. மேட்ரிமோனியலால் வந்த விபரீதம்

சென்னையில் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேட்ரிமோனியல் தளத்தின் மூலம் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இருவீட்டார் சம்மதத்துடன் நடந்த இந்த திருமணத்தின் போது வரதட்சணையாக 50 சவரன் நகைகள் மற்றும் 2 லட்ச ரூபாய் ரொக்கப்பணமும் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவர் திருமணம் ஆகி 5 ஆண்டுகளாகவே மனைவியுடன் நெருங்கிப் பழகமால் இருந்துள்ளார். இதனால் இருவரிடையேயும் மனக்கசப்புகள் இருந்துள்ளது. ராஜசேகர் ஏன் இப்படி இருக்கிறார் என அவரது மனைவிக்கு புரியாமலேயே இருந்துள்ளது.
இந்நிலையில் 5 ஆண்டுகளாக விலகியே இருந்தவர், இருவர் மனைவியுடன் நெருங்கிப் பழகியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது தலையில் இருந்த விக் கீழே விழுந்துள்ளது. இதைக் கண்டது மனைவி அதிர்ச்சியடைந்துள்ளார்.
அவர் வலுக்கைத் தலை என்பதும், விக் வைத்திருப்பதையும் 5 ஆண்டுகளாக மறைத்துள்ளார். மேலும், வரதட்சணையாக வந்த நகைகளை அவர் விற்றுவிட்டு வங்கியில் வைத்திருப்பதாகவும், ஏமாற்றி வந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ராஜசேகர் மீது புகார் அளித்துள்ளார். இதையடுத்து ராஜசேகர் மீது நம்பிக்கை மோசடி, மற்றும் அவரது பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.