‘எனக்கு தற்கொலை எண்ணம் வந்துச்சி’ – அனுபவத்தை பகிர்ந்த யுவன் சங்கர் ராஜா

ஊரடங்கால், பலரும் வேலையின்றி இருக்கின்றனர். இதற்கு பிரபலங்களும் விதிவிலக்கில்லை. இந்நிலையில், தனது ஓய்வை பயன்படுத்தி, யுவன் சங்கர் ராஜா ரசிகர்களின் கேள்விகளுக்கு இன்ஸ்டாகிராமில் பதிலளித்து வருகிறார்.
இதில், நடிகர்கள் பற்றிய கேள்விகள், இசை அனுபவம் என்று சினிமாவைப் பற்றியும், இஸ்லாம் மதத்தைத் தழுவியது, காதல் திருமணம், என்று பர்சனல் விஷயங்கள் பற்றியும் பல்வேறு விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் வலிமை படத்தின் பின்னணி இசை பற்றி ரசிகர்கள் கேட்டனர்.
Yuvan 😓 pic.twitter.com/XBybLw8F7V
— Viral Briyani (@Mysteri13472103) July 3, 2020
காரணம், அஜித்தின் பில்லா, மங்காத்தா படங்களில் யுவன் சங்கர் ராஜாவின் அமைத்த பின்னணி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதனால், வலிமை படத்தின் பிஜிஎம்-க்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதற்குப் பதிலளித்த அவர், “வலிமை படத்தின் பின்னணி இசைக்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. கொரோனாவால் தாமதமாகி வருகிறது” என்று கூறியுள்ளார்.
தற்கொலை எண்ணம் பற்றி இன்னொரு ரசிகர் கேள்வி கேட்டார். “உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மோசமான அச்சம் என்ன, அதில் இருந்து எப்படி மீண்டீர்கள்?” என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள யுவன், “எனக்கும் அதிகமாக தற்கொலை எண்ணம் வந்தது. ஆனால், அவற்றைக் கடக்க எனக்கு இஸ்லாம் உதவியது” என்று தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் பற்றிய ரசிகர் ஒருவரின் கேள்விக்கு, “அவர் எனக்கு பலவழிகளில் ஊக்கமளித்தவர்” என்று தெரிவித்துள்ளார்.