திருமணமாகதவாரா… அப்போ உஷாரா இருங்க! உங்களுக்கு கொரோனா வர அதிக வாய்ப்பிருக்கு!!

திருமணமாகாத, குறைந்த வருவாய் கொண்ட, கல்வியறிவு இல்லாத, ஏழை மக்களை அதிகம் கொண்ட நாடுகளில் பிறந்த ஆண்கள், கொரோனாவுக்கு பலியாகும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கொரோனா தொற்று குறித்து ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கொரோனா தொற்று தொடர்பாக வெளியாகும் விவாத நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளில், கொரோனா தொற்றுக்கு பலியாவோர் தொடர்பாக பல்வேறு காரணிகள் விளக்கப்படலாம் என்றும், ஒவ்வொரு காரணிகளும், கொரோனா தொற்றால் பலியாவோருடன் தனித்தனியாக தொடர்புடையவையாகவே இருக்கும் என்று ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோல்ம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் ஸ்வென் டிரெஃபல் கூறுகிறார்.
ஸ்வீடிஷ் தேசிய சுகாதார மற்றும் நலத்துறையால் கொரோனாவுக்கு பலியானவர்களின் புள்ளி விவரங்களில், 20 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஆராயப்பட்டதில் கிடைத்திருக்கும் தகவலாகும். நேச்சுர் கம்யூனிகேஷன்ஸ் என்ற இதழில் இந்த ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், பொதுவாக வெளிநாடுகளில் பிறந்த மக்களை விடவும், ஸ்வீடனில் பிறந்தவர்கள் கொரோனாவுக்கு பலியாகும் விகிதம் அதிகமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இதுபோலவே, வருவாயும், கல்வியறிவும் கூட கொரோனா பலியுடன் தொடர்பில் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஒரு ஆணாக இருந்து, குறைந்த வருவாய் கொண்டவராக, கல்வியறிவிலும் குறைந்தவராக இருந்தால், அவர் கொரோனாவுக்கு பலியாகும் விகிதம் அதிமாகும். இதே நிலைதான், இதர நோய்களுக்கு பலியாகும் நபர்களுக்கும் பொருந்துகிறது என்கிறது அந்த ஆய்வு.
அது மட்டுமல்லாமல், இந்த ஆய்வில், பெண்களை விடவும், ஆண்களுக்கு கொரோனாவால் பலியாகும் ஆபத்து இரண்டு மடங்கு அதிகம் என்றும் கூறுகிறது. திருமணமானவர்களை விடவும், திருமணமாகாத ஆண் மற்றும் பெண் (திருமணமாகாதவர்கள், விதவைகள், விவாகரத்தானவர்கள்) 1.5 முல் 2 மடங்கு கொரோனாவுக்கு பலியாகும் ஆபத்து அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், திருமணமாகாதவர்களின் வாழ்க்கை முறையும் ஒரு காரணியாக இருப்பதோடு, தனிநபர் தனது உடல்நிலை குறித்து எந்த அளவுக்கு கவனத்தில் எடுத்துக் கொள்வார் என்பதுவும் ஒரு அடிப்படை விஷயமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இது ஸ்வீடனில் கொரோனாவுக்கு பலியானோரின் புள்ளி விவரங்களை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கிடைத்த தகவலாகும்.