“நீட்டை வைத்து அரசியல் செய்ய நினைத்தால், நீட்டா கையாள பாஜக தயார்!” கடுகடுப்பில் எச்.ராஜா!

நீட்டை வைத்து அரசியல் செய்ய நினைத்தால் நீட்டா கையாள்வதற்கு பிஜேபி தயராக உள்ளதாக எச். ராஜா தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மாவட்ட பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நீட் தேர்வை கண்டு ஒர் இருவர் தற்கொலை செய்து கொள்ளுவது துரதிர்ஷ்டமானது. உயிரிழப்பு என்பது ஏற்று கொள்ள கூடிய விஷயம் அல்ல. ஆனால் பிணத்தை வைத்து திமுக அரசியல் செய்வது அநாகரிகத்தின் உச்ச கட்டம். நீட்டை வைத்து அரசியல் செய்ய நினைத்தால் நீட்டா கையாள்வதற்கு பாஜக தயாராகவுள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “எத்தனை பேர் காதல் தோல்வி தற்கொலை செய்து கொள்ளுகின்றர்கள், அப்படி என்றால் தமிழ் நாட்டில் காதலிப்பது குற்றம் என்றும், காதலிப்பவர்களை தண்டனைக்கு உரியயவர்கள் என சட்டம் கொண்டு வர வேண்டும் என்று ஸ்டாலின் பேசுவரா?” என்று எச்.ராஜா கேள்வி எழுப்பினார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x