ஒவ்வொரு நாளும் 20 ஆயிரத்துக்கு மேல் பாதிப்பு… அதிர்ச்சியில் மராட்டிய மக்கள்!

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மராட்டியத்தில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வருகின்றது. நேற்றைய முன்தினம் 22,446 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று மேலும் 22,084 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,37,765 ஆக அதிகரித்துள்ளது. 2,79,768 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள்.

மேலும், நேற்று 391 பேர் மரணமடைந்துள்ள நிலையில், 28,724 பேர் கரோனா தொற்றால் இதுவரை மரணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 14,253 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 7,28,512 ஆக உயர்ந்துள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x