சிங்கப்பூரில் அமைச்சர்களான 5 தமிழர்கள்!

சிங்கப்பூரில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. அதன் புதிய அமைச்சரவையில் 5 தமிழர்கள் உட்பட 37 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

பிரதமர் லீ சியென் லூங் தலைமையில் அமைந்த மக்கள் செயல் கட்சி சிங்கப்பூரில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 37 பேரில் 9 பேர் பெண்கள் ஆவர்.

அதிபர் ஹலிமா உரை நிகழ்த்தி பதவியேற்புச் சடங்கைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து சிங்கப்பூரின் பிரதமர் லீ சியென் லூங் பதவி ஏற்றுக்கொண்டார்.

அவரைத் தொடர்ந்து தர்மன் சண்முகரத்னம், கா.சண்முகம், எஸ்.ஈஸ்வரன், டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், இந்திராணி ராஜா ஆகிய 5 தமிழர்கள் உட்பட 37 பேர் அமைச்சர்களாக பதிவேற்றனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x