குழந்தையை கடித்துக்கொன்ற நாய்.. பெற்றோர் அதிரடி கைது!

பிரிட்டனில், பிறந்த 12 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையை முரட்டு நாய் கடித்துக் குதறி கொன்ற கோர சம்பவம் நடந்தேறியுள்ளது.

டான்கஸ்டர் பகுதியில், திருமணமாகாமல் சேர்ந்த வாழும் தம்பதியர், அபிகயில் எலிஸ் (வயது 27) மற்றும் அவரது காதலர் ஸ்டீபன் ஜோயின்ஸ் (வயது 35). இவர்கள் வீட்டில் செல்ல நாய்களை வளர்த்து வந்தனர்.

இந்நிலையில், இந்த காதலர்களுக்கு, குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தை பிறந்து 12 நாட்களே ஆன நிலையில், குழந்தையை கண்டும்காணாமல் போட்டு விட்டு, தாய் வேறு வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவர்களின் வளர்ப்பு நாய், குழந்தையை கடித்து குதறியுள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திலேயே அந்த அப்பாவிக் குழந்தை உயிரிழந்தது.

இதையடுத்து, பெற்றோரை அதிரடியாக போலீசார் கைது செய்துள்ளனர். இருவரின் கவனக்குறைவாலேயே ஒரு அப்பாவி உயிர் போய்விட்டதாக போலீசார் குற்றஞ்சாட்டியுள்ளனர். நாய் மிகவும் முரட்டுத்தனமாக இருந்ததாகவும், மூன்று போலீசார் இணைந்தே நாயை பிடிக்க முடிந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

The dog attacked the newborn baby.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x