தமிழகத்தில் காலியாக உள்ள 10,906 காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு….

தமிழ்நாடு சீருடைப்பபணியாளர் தேர்வுக்குழுமம் காலியாக உள்ள 10 096 காலியாக உள்ள காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு விடுத்திருக்கிறது .

tnusrbonline.org என்ற இணையத்தளத்தில் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 26 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் டிசம்பர் 13ல் எழுத்துதேர்வு நடைபெறும் என்றும் தமிழ்நாடு சீருடைபணியாளர் தேர்வுக்குழுமம் அறிவித்து உள்ளது.

37 மாவட்டங்களில் உள்ள மையங்களில் 1 மணி 20 நிமிடங்கள் எழுத்துத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதப்படை 2ம் நிலை காவலர் பதவிக்கு 3,099 பெண்கள், திருநங்கைகள் உள்பட 3,784 பேர் தேர்வு செய்யப்படுவர். தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் 2ம் நிலை காவலர் பதவிக்கு 6,545 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

சிறைத்துறையில் 2ம் நிலை காவலர் பதவிக்கு 119 பேர் தேர்வாக உள்ளனர். தீயணைப்பு துறையில் தீயணைப்பாளர் பணியிடத்துக்கு 458 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவலுக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைத்தளத்தை பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x