கொரோனாவிலிருந்து மீண்ட மனைவிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

கர்நாடக மாநிலம் தும்குரு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திர ராவ். அவரது மனைவி கலாவதிக்கு, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொரோனா உறுதிபடுத்தப்பட்டது. அதையடுத்து, சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று குணம் அடைந்து வீடு திரும்பினார். வீட்டுக்கு திரும்பி வந்த மனைவி கலாவதியை வித்தியாசமான முறையில் வரவேற்க முடிவு செய்த ராமச்சந்திரராவ், சிவப்பு கம்பளம் விரித்து , மனைவியை வரவேற்றார். மலர் தூய செய்ய பணிபெண்கள் நியமனம் உள்ளிட்ட அனைத்தையும் சிறப்பாக செய்து மனைவியை அசத்தினார்.
இது குறித்து ராமச்சந்திர ராவ் கூறுகையில், “நான் தீவிர ரஜினி ரசிகர். அதனால், கபாலி பட ஸ்டைலில் மனைவிக்கு வரவேற்பு கொடுத்தேன்.”என்று தெரிவித்தார்.
“மூன்று மாதங்களாக கொரோனா வார்டில் செவிலியராக பணிபுரிந்து வந்த எனக்கும் தொற்று ஏற்பட்டது. எனினும், மக்கள் வேகமாக குணமடைவதை நான் பார்த்ததால், நானும் குணமடைவேன் என்ற நம்பிக்கை இருந்தது. வரும் 1-ம் தேதி மீண்டும் பணியில் சேருவேன்” என்று கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்த கலாவதி கூறினார்.