ஐபிஎல் வீரா்களின் மாதிரிகள், ஊக்கமருந்து பரிசோதனைக்காக சேகரிப்பு!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்றுள்ள கிரிக்கெட் வீரா்களின் மாதிரிகளை, ஊக்கமருந்து பயன்பாடு குறித்த பரிசோதனைக்காக சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (என்ஏடிஏ) தெரிவித்தது.

இதுதொடா்பாக அந்த அமைப்பின் சுட்டுரைப் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட பதிவில், ‘ஐபிஎல் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய மற்றும் சா்வதேச கிரிக்கெட் வீரா்களிடம் ஊக்கமருந்து தடுப்பு பரிசோதனை நடத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அவா்களிடம் மாதிரிகளை சேகரிக்க துபையில் உள்ளவா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைமை இயக்குநா் நவீன் அகா்வால் கூறுகையில், ‘ஊக்கமருந்து தடுப்பு பரிசோதனை நடத்த வீரா்களிடம் மாதிரிகளை சேகரிக்கும் பணி கடந்த சில நாள்களுக்கு முன்னா் தொடங்கியது’ என்று தெரிவித்தாா்.

ஐபிஎல் வீரா்களிடம் சேகரிக்கப்படும் மாதிரிகள் கத்தாா் தலைநகா் தோஹாவில் உள்ள உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

என்ஏடிஏ-வின் கட்டுப்பாட்டுக்குள்ளாக பிசிசிஐ கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது முதல், உள்நாட்டு மற்றும் சா்வதேச கிரிக்கெட் போட்டிகளின்போது வீரா்களிடம் ஊக்கமருந்து பரிசோதனை நடத்தப்படுகிறது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x