அரசு ரேடியோ ஊழியர்களுக்கே இந்த நிலைமையா? அப்போ திருவாளர் பொதுஜனம்….?!

அகில இந்திய வானொலியில் பணி புரிந்து வந்த ரேடியோ ஜாக்கிகள் 80 பேர் திடீர் என பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அகில இந்திய வானொலியின் சார்பில் எஃப் .எஃம் ரெயின்போ இயக்கப்பட்டு வந்தது. இதில் பகல் மற்றும் இரவு முழுவதும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் செய்திகள் மற்றும் பாலிவுட் பாடல்கள் பொது விழிப்புணர்வு, கல்வி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வந்தன.
இந்த பணியில் ரேடியோ வர்ணனையாளர்களாக, 80 க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்தனர். மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.11 ஆயிரம் வரையில் மாத ஊதியம் பெற்று வந்தனர். இந்நிலையில், பல வருடங்களாக பணியாற்றி வந்த ஊழியர்கள் கூண்டாக திடீர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுபற்றி ஆர்.ஜே வாக 20 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வந்த ஆஷிமாபிரகாஷ் கூறும்போது, “தற்போது வேலை இழப்பு காரணமாக நான் கடுமையான பிரச்னைகளை சந்தித்து வருகிறேன். நானும் மற்ற ஆர்.ஜே.க்களும் மார்ச் மாத சம்பளமாவது தருமாறு கோரிக்கை விடுத்தோம்.
ஆனால் எல்லா முயற்சிகளும் பயனற்றவையாக போய்விட்டது. ஆர்.ஜேக்கள் ஒரு போதும் சிறப்பாக நடத்தப்படவில்லை. நாடே அரசு கொண்டு வந்த பொதுமுடக்கத்தால், பொருளாதாரத்தில் தத்தளித்து வரும் நிலையில், 80 பேர் வேலையில் இருந்து திடீர் என வெளியேற்றப்பட்டுள்ளனர்.” என்று தெரிவித்தர்.