“முதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மாற்ற பிரதமர் மோடி துணிந்து விட்டார்” ராகுல்காந்தி!!

“மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்துறை தொடா்பான 3 மசோதாக்கள் மூலம் முதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மாற்ற பிரதமர் மோடி நினைக்கிறார்” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
விவசாயிகளுக்கான உற்பத்தி வா்த்தக மற்றும் வணிகம் (மேம்படுத்துதல் மற்றும் வசதி ஏற்படுத்தித் தருதல்) மசோதா, விவசாயிகளுக்கான (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதிப்பாடு மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா, அத்தியாவசிய பொருள்கள் சட்டத்திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்கள் மக்களவையில் நிறைவேறிவிட்ட நிலையில் இன்று (செப்.20) மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானவை, பெருநிறுவனங்களுக்கு ஆதரவானவை என்று குற்றம்சாட்டிய எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வேளாண் மசோதாக்களை தாக்கல் செய்துள்ளார்.
मोदी सरकार के कृषि-विरोधी ‘काले क़ानून’ से किसानों को:
1. APMC/किसान मार्केट ख़त्म होने पर MSP कैसे मिलेगा?
2. MSP की गारंटी क्यों नहीं?मोदी जी किसानों को पूँजीपतियों का ‘ग़ुलाम' बना रहे हैं जिसे देश कभी सफल नहीं होने देगा।#KisanVirodhiNarendraModi
— Rahul Gandhi (@RahulGandhi) September 20, 2020
இந்நிலையில், காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில் மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கடுமையாக சாடி பதிவிட்டுள்ளார்.அதில், “மோடி அரசாங்கத்தால் விவசாயத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டத்தில் குறைந்த ஆதரவு விலைக்கு ஏன் உத்தரவாதம் அளிக்கவில்லை? முதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மாற்ற பிரதமர் மோடி நினைக்கிறார். மத்திய அரசின் இந்த வேளாண் திட்டம் வெற்றி பெற நாடு ஒருபோதும் அனுமதிக்காது” என்று தெரிவித்துள்ளார்.