குளிர்காலங்களில் கொரோனா பரவல் தீவிரமாகி, முன்பை விட அதி வேகமாக பரவும் வாய்ப்பு!!

குளிர்காலங்களில் கொரோனா பரவல் தீவிரமாகி, முன்பை விட அதி வேகமாக பரவும் வாய்ப்பு உள்ளதாக சுகாதார வல்லுனர்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பெரும்பாலான நாடுகளிலும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தற்போது குளிர்காலம் நெருங்கும் நிலையில், வெப்பநிலை குறைந்து வருவதால் கொரோனா முன்பை விட மின்னல் வேகத்தில் அதிக அளவில் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார வல்லுநர்கள் அஞ்சுகின்றனர். இது முதல் முறை பரவியதை விட மோசமாக இருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.
கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் ஆராய்ச்சிகள் மனித பரிசோதனை கட்டங்களில் உள்ளதாகவும், நல்ல முன்னேறங்களை காண முடிவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் 2021 ஆம் ஆண்டின் முற்பகுதி வரை, தடுப்பூசி மருந்து பயன்பாட்டிற்கு வரும் சாத்தியமில்லை. அதை எதிர்பார்க்க முடியாது என்று WHO அவசரகால திட்டத்தின் தலைவரான மைக் ரியான் ஜூலை மாதத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், சில வல்லுநர்கள் குளிர்காலத்தில் தொற்றுநோயின் இரண்டாவது அலை ஏற்படும் வாய்ப்பு குறித்து கவலைகளை எழுப்பியுள்ளனர், இது முதல் முறையை விட மிக மோசமானது என்று பீதியை கிளப்பியுள்ளனர். இதற்கு முன்னதாக அக்., மாதத்தில் இந்தியாவில் கொரோனா பரவல் 7 மில்லியனை தாண்டக்கூடும் என ஏற்கனவே ஒரு ஆய்வில் தெரிய வந்தது. தொடர்ந்து, அக்., – டிச., மற்றும் பிப்., மாதங்களுக்கிடையே நோய் பரவல் வேகமாகவும், மோசமாகவும் இருக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.