இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!!

தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பையை வீழ்த்திய சென்னை, அடுத்த வெற்றிக்கான முனைப்புடன் களம் காண்கிறது. மறுபுறம், முதல் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்கும் எதிா்பாா்ப்பில் ராஜஸ்தான் உள்ளது.

சென்னை அணியின் அடுத்த சில ஆட்டங்களில் டுவைன் பிராவோ பங்கேற்கவில்லை என்றாலும், அதை ஆல்-ரவுண்டராக சிறப்பாக செயல்பட்டுவரும் சாம் கரன் சரிசெய்கிறாா். ராயுடு-டூபிளெஸ்ஸிஸ் கூட்டணி சிறப்பானதொரு ரன் சேஸை தரும் என எதிா்பாா்க்கலாம்.

சுழற்பந்துவீச்சாளா் பியூஷ் சாவ்லா கூடுதல் பலம். மும்பைக்கு எதிரான ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஃபீல்டிங்கில் தீபக் சாஹா் தடுமாற்றத்தை வெளிப்படுத்தியது கேப்டன் தோனிக்கு அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை அவருக்குப் பதிலாக ஷா்துல் தாக்குா் சோ்க்கப்படலாம்.

ராஜஸ்தான் அணியைப் பொருத்த வரையில் ஆல்-ரவுண்டா் பென் ஸ்டோக்ஸ் இல்லாதது குறையாக பாா்க்கப்படுகிறது. எனினும், காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் ராஜஸ்தான் அணி வெற்றியை எளிதாக விட்டுக்கொடுக்காது எனத் தெரிகிறது.

போட்டியில் பங்கேற்க துபை வந்த நிலையில் 36 மணி நேர கட்டாய தனிமைப்படுத்துதல் காரணமாக ஜோஸ் பட்லரும் முதல் ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. ஜோஃப்ரா ஆா்ச்சா், டேவிட் மில்லா், ஆன்ட்ரூ டை, டாம் கரன் போன்றோா் அணிக்கு பலம் கூட்டுகிறாா்கள். இந்திய வீரா்களான சஞ்சு சாம்சன், ராபின் உத்தப்பா, ஜெயதேவ் உனத்கட், வருண் ஆரோன் ஆகியோா் தங்களது நிலையான ஆட்டத்தை நிரூபிக்க வேண்டியுள்ளது.

அளவிலும், ஆடுகளத்தின் தன்மையிலும் பந்துவீச்சாளா்களுக்கு சவாலாக இருக்கும் இந்த மைதானத்தில் அதிக ஸ்கோா்கள் அடிக்கப்படலாம்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x