வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ.1 கோடி: நடிகர் அக்சய் குமார் தாராளம்

பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமார், அசாம் மாநில வெள்ள நிவாரணப் பணிகளுக்காக 1 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.

பருவமழை காரணமாக அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. அசாம் மாநிலத்தின் 28 மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக இதுவரை வெள்ளத்திற்கு 128 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் அசாம் மாநில வெள்ள நிவாரணப் பணிகளுக்கு பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமார்  1 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.

அசாம் முதல்வர் சர்பானந்தா சோனாவால்

இது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் சர்பானந்தா சோனாவால் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவு:

அசாமின் இக்கட்டான நிலையில், வெள்ள நிவாரணத்திற்கு, நடிகர் அக்சய் குமார் தனது பங்களிப்பாக, 1 கோடி ரூபாய் வழங்கியதன் மூலம் அசாமின் உண்மையான நண்பனாக உள்ளீர்கள். இறைவன் அருளால் உங்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கட்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x