தகரசீட் போடப்பட்ட சிறிய வீட்டில் பெட்டி பெட்டியாக தங்கம், வெள்ளி நகைகள்… ஆந்திராவில் பரபரப்பு !! அரசு கருவூல ஊழியருக்கு தொடர்பு ??

ஆந்திராவில் அனந்தபுரம் மாவட்டத்தில் தகரசீட் போடப்பட்ட சிறிய வீடு ஒன்றில் பாதுகாக்கப்பட்ட 8 இரும்பு பெட்டிகளில் இரண்டரை கிலோ தங்கம், 80 கிலோ வெள்ளி மற்றும் 15 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

புங்கராசமுத்திரம் கிராமத்தில் பாலாய்யா என்பவர் வசித்து வரும் தகரசீட் போடப்பட்ட சிறிய வீட்டில் இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் விலை உயர்ந்த கார்களையும், கை துப்பாக்கி ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து 50 கோடி ரூபாய் மதிப்புள்ள வங்கி முதலீட்டு பத்திரங்களும் சிக்கியுள்ளன. இதுகுறித்து பாலாய்யாவிடன் நடத்தப்பட்ட விசாரணையில், தமக்கும் இந்த இரும்பு பெட்டிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளார்.

தனது மருமகன், மனோஜ் என்பவரிடம் ஓட்டுநராக பணி செய்வதாகவும், மனோஜ் கொடுக்கும் பெட்டிகளை வீட்டில் கொண்டு வைத்திருப்பதாகவும் பாலாய்யா கூறியுள்ளார். அரசு கருவூலத்தில் பணியாற்றும் மனோஜ் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். ரியல் எஸ்டேட் தொழிலில் வரவு, செலவு சமூகமாக நடைபெற 10 அடியாட்கள் வைத்து பராமரித்து வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து, இரும்பு பெட்டியில் சிக்கிய தங்கம், வெள்ளி, நகைகள் மனோஜுக்கு சொந்தமானதா? இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் வருமான வரித்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x