“இந்தியாவில் திரையரங்குகளைத் திறக்கும் முதல் மாநிலம் தமிழகம் தான்!” அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி!

தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கமளித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் கடந்த 6 மாத காலமாக தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த திரையுலகமே முடங்கிப்போயுள்ளது. மீண்டும் தியேட்டர்களை திறந்து தங்கள் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவேண்டும் எனக் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பல படங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் கடம்பூர் ராஜு, “மத்திய அரசு அறிக்கை வெளியிட்டதும், திரையரங்குகளைத் திறக்கும் முதல் மாநிலமாகத் தமிழகம் இருக்கும்” என உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பல்வேறு துறைகளில் தாராள தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதேபோல் திரைத்துறைக்கும் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. தியேட்டர்கள் இன்னும் திறக்கப்படாதது திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x