“தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் பேசமாட்டேன்” – மன்னிப்பு கேட்ட எஸ்.வி.சேகர்

தேசிய கொடி அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்டு நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார் பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர்.

சமீபத்தில் தமிழக முதல்வரையும், தேசிய கொடியையும் குறித்து பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில், தேசிய கொடியை அவமதித்ததாக எஸ்.வி.சேகர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் தேசிய கொடியை அவமதித்த வழக்கில் எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதை தொடர்ந்து எஸ்.வி.சேகர் தான் தேசிய கொடி குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். எதிர்காலத்தில் தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் பேசமாட்டேன் என அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x