பயணிகளிடம் வங்கிக் கணக்கு விவரங்களை ரயில்வே கேட்பதில்லை..!

ரயில் பயணிகளிடம் வங்கிக் கணக்கு விவரங்களை ரயில்வே நிர்வாகம் கேட்கவில்லை தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

பயணச்சீட்டு கட்டணத்தைத் திரும்பப் பெறுவதற்காகப் பயணிகளுடைய வங்கிக் கணக்கு போன்ற விவரங்களை ரயில்வே நிர்வாகம் தொலைபேசி வாயிலாக ஒருபோதும் கேட்பதில்லை. மோசடி கும்பலைச் சேர்ந்த சிலர் இது போன்ற தகவல்களைத் தொலைபேசி வாயிலாகக் கேட்பதாகப் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.

ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தொலைபேசி வாயிலாக வங்கி ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு எண்கள், வங்கி சங்கேத எண்கள், ஏடிஎம் பாஸ்வேர்டு ஆகியவையும் தெரிவிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக இணையதளத்தின் மூலம் பதிவு செய்த ‌ பயணச்சீட்டுகளுக்கான கட்டணத் தொகை பயணம் ரத்தாகும்போது பயணிகளுடைய வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

ரயில் நிலையங்களில் பதிவு செய்யப்படும் பயணச்சீட்டு காண கட்டணம் உரிய காலக்கெடுவில் ரயில் நிலையங்களில் திரும்ப தரப்பட்டு வருகிறது. எனவே தனி நபர் வங்கி கணக்கு சம்பந்தமான விஷயங்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டியதில்லை. 

இந்த தகவல்களை யாராவது தொலைபேசியில் கேட்டாள் இதுபற்றி ரயில்வே பயணிகள் உதவி தொலைபேசி எண் 138 -ல் புகார் செய்யலாம், என தென்னக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x