விழுப்புரம் அருகே ஒருதலைக் காதலால் விபரீதம்.. பள்ளி சிறுமி கத்தரிக்கோலால் குத்தி கொலை!!

விழுப்புரம் அருகே சோழாபூண்டி திரவுபதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பிரியன் (45). இவருக்கு சகுந்தலா என்பவருடன் திருமணமாகி பிரியதர்ஷினி (13), சரண்யா (10), பிரேம்குமார் (9) என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

பிரியதர்ஷினி, ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று அவருடைய பெற்றோர் வேலைக்குச் சென்றுள்ளனர். சரண்யா, பிரேம்குமார் ஆகிய இருவரும் விளையாடுவதற்காக வெளியே சென்றனர். மதியம் 2 மணியளவில் பிரியதர்ஷினி மட்டும் வீட்டில் தனியாக டி.வி. பார்த்து கொண்டிருந்தாள்.

அப்போது, அதே தெருவை சேர்ந்த 16 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் (வாய் பேச முடியாத மற்றும் காது கேளாதவர்) பிரியதர்ஷினி தனியாக இருப்பதை நோட்டமிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளான். அங்கிருந்த பிரியதர்ஷினியின் வாயை பொத்தி, பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். அப்போது சிறுமி சத்தம் போட்டதால் மறைத்து வைத்திருந்த கத்தரிக்கோலால் பிரியதர்ஷினியின் வயிறு மற்றும் முதுகு பகுதியில் குத்தியுள்ளான். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்க்தினர் வந்தனர். அங்கு பிரியதர்ஷினி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மற்றொருபுறம் சிறுவன் ரத்தகறை படிந்த கத்தரிக்கோலுடன் தப்ப முயன்றான். அதற்குள் அவனை மடக்கி பிடித்தனர்.

இதுகுறித்து காவல்நிலைத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து சிறுவனிடம் விசாரித்தனர். அந்த சிறுவன் சென்னை அடையாறில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்ததும். கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டுக்கு வந்ததும் தெரியவந்தது. மேலும், பிரியதர்ஷினியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். நேற்று தனியாக இருப்பதை அறிந்து பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். ஆனால், பிரியதர்ஷினி மறுத்ததால் தயாராக கொண்டுவந்திருந்த கத்தரிக்கோலால் அவளை குத்தி கொலை செய்துள்ளான் என்று தெரியவந்தது. அவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x