பெயர் மாற்றம் செய்யப்பட உள்ள அண்ணா பல்கலைக்கழகம்.. வலுக்கும் பேராசிரியர்களின் எதிர்ப்பு!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேராசிரியர்கள் தொடர் போராட்டத்தை  முன்னெடுத்து வருகின்றனர்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.. இதனை அடுத்து இப்போது உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என்று மாற்றம் செய்யவும், அதேபோல் பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்க உருவாக்கப்படும் புதிய பல்கலைக்கழகத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

ஆனால் பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக்கூடாது என வலியுறுத்தி அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து தற்போது அங்கு பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் நாளை மனித சங்கிலி போராட்டம் நடத்தப்போவதாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெயர் மாற்றும் முடிவை கைவிடும் வரை இது தொடர்பாக பல்வேறு வடிவங்களில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக பேராசிரியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x