விருந்தில் மணமகனை கத்தியால் குத்திய நண்பர்கள் கைது!! 

உத்தர பிரதேசத்தில் திருமணத்துக்கு முந்தைய நாள் விருந்தில் அதிக மதுபானம் கொடுக்க மறுத்த மணமகனை கத்தியால் குத்திய நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இப்போது திருமணம் என்றாலே பேச்சிலர் பார்ட்டி என்ற பெயரில் நண்பர்களுக்கு மதுபான விருந்து தரப்படுகிறது. அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு கிராமத்தில் கடந்த திங்கள்கிழமை இரவு 28 வயதான பப்லு என்ற நபர் தனது திருமணத்திற்கு பின் நண்பர்களை சந்திப்பதற்காக சென்றுள்ளார்.

அப்பொழுது அவரது நண்பர்கள் கூடுதலாக மது ஊற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஆனால் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்து பப்லுவை கத்தியால் குத்தி உள்ளனர்.

இதனையடுத்து, அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் முக்கிய குற்றவாளியான ராம்கிலாடி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் நடந்த சில மணி நேரங்களில் மணமகன் அவரது நண்பர்களால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x