கொலை செய்வதற்காக ஒருமாதம் பயிற்சி!!யானைக்கவுனி கொலைவழக்கில் அதிர்ச்சி தகவல்..

சென்னை யானைக்கவுனியில் 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதான கைலாஷ், கொலை செய்வதற்காகவே துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் ஈடுபட்டது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
சவுக்கார்பேட்டையில் வசித்துவந்த தலீல்சந்த், அவரின் மனைவி புஷ்பா பாய், மகன் ஷீத்தல் குமார் ஆகியோர் கொடூரமாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கைலாஷ் ஒன்றரை மாதத்திற்கு முன்பே சென்னைக்கு வந்ததும், துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
காஞ்சிபுரம் அருகே தங்கியிருந்த கைலாஷ், கள்ளச்சந்தையில் சில துப்பாக்கிகளை வாங்கி, சத்தம் குறைவாக கேட்கும் துப்பாக்கியை வைத்து பயிற்சியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.