மொபைலை ஆர்டர் செய்தவருக்கு, சோப்பு கட்டிகளை அனுப்பி ஏமாற்றிய பிரபல ஆன்லைன் நிறுவனம்!!

ஆன்லைன் வணிகத்தில் செல்போன் வாங்கிய ஒருவருக்கு, சோப்புகளை டெலிவரி செய்து நூதன மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கோபால் என்பவர் பிளிப்கார்ட் ஆன்லைன் வணிகத்தில் மோட்டர்ரோலோ செல்போனை கடந்த 10ம் தேதி வாங்கியுள்ளார். இவருக்கு 12ம் தேதி டெலிவரி செய்த பார்சலை பிரித்து பார்த்த போது அதில் துணி துவைக்கும் சோப் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக பிளிப்கார்ட் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதன்பின்னர் கடந்த 17ம்தேதி அனுப்பிய இமெயிலில், பார்சல் பாக்சில் இருந்த ஸ்டிக்கர், பார்சலில் இருந்த ரசீது உள்ளிட்ட விவரங்களை அனுப்பியுள்ளார். இருப்பினும் இதுவரை அவருக்கு செல்போன் செலுத்திய தொகையோ அல்லது மாற்று செல்போனோ வழங்கவில்லை எனவும் வேதனை தெரிவத்துள்ளார்.

ஆன்லைன் வணிகத்தில் பலகோடி ரூபாய் வருவாய் ஈட்டி வரும் நிறுவனங்கள், தங்களின் பொருட்களை டெலிவரி செய்வதில் நிலவும் குறைபாடுகளை உடனுக்குடன் களைந்திட வேண்டும் என்பதே வாடிக்கையாளர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x