“தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இல்லை!” தேர்தல் ஆணையம் முடிவு!

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தலை நடத்துவதில்லை என தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் மற்றும் சேப்பாக்கம் ஆகிய தொகுதிகளில் எம்எல்ஏக்கள் காலமான நிலையில் இந்த தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பீகார் சட்ட மன்ற தேர்தலுடன், இடைத் தேர்தல் பற்றி அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது காலியாக உள்ளத் தொகுதிகளுக்கு இந்த ஆண்டு இடைத்தேர்தல் நடைபெறாது என்றும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலோடு அவற்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
அதே நேரத்தில் வசந்தகுமார் எம்பி அவர்களின் மறைவால் காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு கொரோனா காரணமாக தேர்தலை நடத்த வேண்டாம் என தமிழக தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது என்பதால் அந்த தொகுதியின் தேர்தலை தள்ளிப் வைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.