குப்பையோடு குப்பையாக ஏற்றப்பட்ட கொரோனா சடலங்கள்!

ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்த இருவரது உடலை குப்பை வண்டியில் ஏற்றிச் சென்ற விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இவர் சிறப்பாக ஆட்சி புரிவதாக சமூக ஊடகங்களில் அவ்வப்போது யாராவது எழுதுவார்கள். அதனை பலரும் பரப்பி தமிழ்நாட்டில் இப்படி ஒரு முதல்வர் இல்லையே என ஏங்குவார்கள்.
ஆனால் அவர் ஆட்சியில் தான் சுகாதாரத் துறை கொரோனா வைரஸை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. அந்த வகையில் தமிழகம் கொரோனா தடுப்பில் ஒரளவு பராவாயில்லை என்றே கூறலாம். இங்கு தொடர்சியாக பரிசோதனைகள், தனிமைப்படுத்தல்கள், சிகிச்சைகள் நடக்கின்றன.

ஆந்திராவில் ஜூன் இறுதி வரை சொல்லிக்கொள்ளும் படி பெரியளவில் கொரோனா பரிசோதனைகள் நடக்கவில்லை. அப்போது 14,500 ஆக இருந்த பாதிப்பு, கடந்த ஜூலையில் பரிசோதனையை அதிகப்படுத்தியதும் மாதத்தின் முடிவில் 1.5 லட்சமாக உயர்ந்தது. ஒரே மாதத்தில் பத்து மடங்காக பாதிப்பு உயர்ந்ததால் சுகாதாரத் துறையால் அந்த பலுவை சமாளிக்க முடியவில்லை.
இந்த நிலையில்ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் காவலி பகுதியில் கொரோனாவால் 2 பேர் இறந்துள்ளனர். அவர்களின் சடலத்தை கொண்டு செல்ல அச்சமயம் ஆம்புலன்ஸ் இல்லை என்பதால், குப்பை ஏற்றி செல்லும் டிராக்டரில் கொண்டு சென்றுள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.