15 வயது மாணவனுக்கு, மேலாடை இல்லாமல் படம் அனுப்பிய டீச்சர்… நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பு

பிரிட்டனில், 35 வயதுடைய பள்ளி ஆசிரியை ஒருவர் 15 வயது மாணவனுடன் பாலியல் தொடர்பில் ஈடுபட்டதுடன், மேலாடை இல்லாத புகைப்படங்களை சிறுவனுக்கு அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அவர் குற்றவாளி என நிரூபணம் ஆகியுள்ளது.

பிரிட்டனின் பக்கிங்காம்ஷைர் பகுதியை சேர்ந்தவர் கேண்டிஸ் பார்பர். 35 வயதாகிறது. ​​மூன்று குழந்தைகளின் தாயான இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த பள்ளியில் படிக்கும் 15 வயது நிரம்பாத மாணவன் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிறுவனின் தொலைபேசி எண்ணை வாங்கிக்கொண்ட அந்த பெண், வீட்டுக்கு சென்று, மேலாடை இல்லாத தன் அரைநிர்வாண புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளார்.

அதன்பின்னர், உன்னை நேரில் பார்க்க வேண்டும் என்று கூறி, பள்ளி முடிந்தபின்னர், காட்டுப்பகுதி ஒன்றுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இதுபல முறை தொடர்ந்துள்ளது. இந்நிலையில், ஆசிரியையின் அரைநிர்வாண புகைப்படங்கள் வெளியானது. மேலும், டீச்சர் கர்ப்பமானதால், சிறுவன் பள்ளிக்கு செல்லாமல் ஒரு வித பதட்டத்துடன் இருந்துள்ளான். இதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில் கையும் களவுமாக டீச்சர் பிடிபட்டார்.

Jury considers verdict as topless Snapchat picture teacher denies pupil sex  rap - Daily Record

போலீசார் இதை குற்ற வழக்காக பதிவு விசாரித்து வந்தனர். இது குறித்த வழக்கு விசாரணை, ஏயில்பெரி கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் மேலாடைஇல்லாத படங்கள் மற்றும் ஒரு வீடியோ தொடர்பான இரண்டு பாலியல் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என கண்டறியப்பட்டுள்ளார். ஆனால் சிறுவனை உறவுக்கு தூண்டியது உள்ளிட்ட மேலும் மூன்று குற்றச்சாட்டுகள் மீதான தீர்ப்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதனால் இந்த விசாரணைவரும் ஜனவரி மாதம் 18-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x