ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் நடைபெற்று வந்த அகழாய்வு பணிகள் இன்றுடன் நிறைவடைந்தன.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் கடந்த மே 25ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பில் அகழாய்வு பணி நடைபெற்று வந்தது. ஆதிச்சநல்லூர் அகழாய்வில் 27 முதுமக்கள் தாழிகள், தமிழ் பிராமி எழுத்துக்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட 27 வடிகால் குழாய்கள், மண்பானைகள் மற்றும் பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதேபோல், சிவகளை அகழாய்வு பணியில், 34 முதுமக்கள் தாழிகளும், தமிழ் பிராமி எழுத்துக்களும் கண்டறியப்பட்டன. இந்நிலையில், அகழாய்வு பணிகள் இன்றுடன் நிறைவடைய உள்ளன. அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட ஒவ்வொரு பொருட்களும் கார்பன் பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளன. அதன் பின்னரே அகழாய்வு குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்படும். ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கையில் அடுத்த ஆண்டும் தமிழக அரசு சார்பில் அகழாய்வுப் பணிகள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
