வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டிராக்டர் பேரணி நடத்தும் ராகுல்..

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்., எம்.பி., ராகுல், அக்.,4,5,6 ஆகிய தேதிகளில் டிராக்டர் பேரணி நடத்த உள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா, உ.பி., மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு காங்., கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடவும் காங்., திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், வேளாண் சட்டத்தை கண்டித்து நாளை முதல் 3 நாட்களுக்கு (அக்.,4,5,6,) தொடர் டிராக்டர் பேரணியில் ராகுல் ஈடுபட உள்ளார். முன்னதாக 3ம் தேதி(இன்று) இப்பேரணி தொடரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி, காலை 11 மணிக்கு பேரணி துவங்கும் என்றும், பஞ்சாபில் துவங்கும் பேரணி 6ம் தேதி அரியானாவில் முடிவடையும் எனவும் காங்., கட்சி தெரிவித்துள்ளது.