6000 காலி பணியிடங்கள்…12 ஆம் தேர்ச்சி போதும்!!!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள போஸ்டல் அசிஷ்டன்ட் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 6 ஆயிரம் பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ.80 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடம் குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாங்க.


பணியாளர் தேர்வு வாரியம்:-

மத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட SSC எனும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆட்களைத் தேர்வு செய்கிறது. அதன்படி, தற்போது மத்திய அரசுத் துறையில் உள்ள போஸ்டல் அசிஷ்டன்ட் பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:-

SSC சார்பில் தற்போது 6 ஆயிரம் Postal Assistant பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் 6ம் தேதியன்று இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:-

Postal Assistant பணிக்கு விண்ணப்பதாரர் குறைந்தது 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட துறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது வரம்பு:-

தற்போது வெளியிடப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கான அறிவிப்பில் வயது வரம்பும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர் 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் மற்றும் காலிப் பணியிடங்கள்:-

எஸ்எஸ்சி தேர்வு வாரியத்தின் சார்பில் 6 ஆயிரம் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதில், தேர்வு செய்யப்படுவோர்களுக்கு மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரையில் ஊதியம் வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:-

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_chsl_06112020.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தளத்திற்குச் சென்று முழு விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை:-

Postal Assistant பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://ssc.nic.in/ என்ற இணையதளம் மூலம் 15.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்பாக, அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து சான்றுகளையும் முழுமையாக விண்ணப்பிக்க வேண்டியது கட்டாயம்.

தேர்வு முறை:-

விண்ணப்பதாரர்களில் கணினி அடிப்படையிலான தேர்வு, திறன் சோதனை மற்றும் தட்டச்சு சோதனையின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:-

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்கள் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். பெண்கள் மற்றும் எஸ்.டி., எஸ்.சி., பி.டபிள்யு.டி, இ.எஸ்.எம் போன்ற மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

மேலும் விபரங்களுக்கு:-

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ssc.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும். 15.12.2020 தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையுங்கள்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x