அமெரிக்க அதிபர் டிரம்ப் குணமடைய வாழ்த்து தெரிவித்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் குணமடைய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், அவரது மனைவி மெலனியா டிரம்பும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் இருவருக்குமே கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இருவரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வெள்ளைமாளிகையில் உள்ள டொனால்டு டிரம்பிற்கு நேற்று முதல் தொடர்ந்து லேசான அறிகுறியுடன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால், அலபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரேட் தேசிய ராணுவ மருத்துமனையில் டிரம்ப் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்றில் இருந்து இருவரும் விரைவில் குணமடைய பல்வேறு நாடுகளின் பிரதமர்களும், அதிபர்களும் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில், டிரம்புடன் அடிக்கடி வார்த்தை போர் தொடுத்துக்கொண்டிருந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், டிரம்ப் குணமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து வடகொரியாவின் அரசு ஊடகமான கே.சி.என்.ஏ தரப்பில், “அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும்  அவரது மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. இருவரும் நல்ல உடல் நலத்துடன் விரைவில் குணமடைய வாழ்த்துகள்.” என செய்தி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x