பி.சி.ஆர். சோதனையின்போது, கவனக்குறைவால் பெண்ணின் மூளையைத் துளைத்த பரிசோதனைக் கருவி!!

உலகம் முழுவதும் அனைவரது இயல்பு வாழ்க்கையும் கொரோனா வைரஸ் மாற்றியமைத்துள்ளது.
இந்நிலையில், கொரோனாவை கண்டறிய உலகளாவிய ரீதியிர் பி.சி.ஆர் எனும் பரிசோதனை முறை கையாளப்படுகிறது. இம்முறை மூலம் மூக்கு மற்றும் வாய் வழியாக மாதிரிகள் எடுக்கப்படுகின்றன.
அமெரிக்காவை சேர்ந்த 40 வயதான பெண் ஒருவருக்கு மூக்கு வழியாக மாதிரி எடுக்க முற்படும்போது, பரிசோதனை செய்தவரின் கவனக்குறைவால், அந்த கருவியானது மூக்குவழியாக மிக வேகமாக மூளையின் சுற்றுப்புற அமைப்பை துளைத்துள்ளது.
இதன் காரணமாக மூளையை சுற்றியுள்ள திரவமானது மூக்கு வழியாக அந்த பெண்ணுக்கு கசியத்தொடங்கியுள்ளதாக மருத்துவர் ஒருவர் மருத்துவ ஆராய்ச்சி இதழில் விரிவாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்தானது கொரோனா பரிசோதனை மேற்கொள்பவர்களுக்கு எச்சரிக்கை தரும் விதமாக அமைந்துள்ளதாகவும் அந்த மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.