நாளை முதல் போலீஸ் தேர்வுக்கு இணையத்தளம் மூலம் இலவச பயிற்சி!!!

சிவகங்கை :

சிவகங்கை வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கு இணையதளம் மூலம் அக்.,5 முதல் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் மூலம் கிரேடு 2 போலீஸ், தீயணைப்பு வீரர், சிறைக்காவலர் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர். இவர்களுக்கான போட்டி தேர்வு டிச.,13ல் நடக்கிறது.இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஆன்லைன் மூலம் (ஜூம் ஆப்) அக்., 5 முதல் நடக்கிறது.

பயிற்சி பெற விரும்புவோர் 95007 65372, 88254 71837 என்ற எண்ணில் பெயரை பதிவு செய்து, பயிற்சியில் சேரலாம்.

மேலும்,

‘tamilnadu careerservices.tn.gov.in” என்றஇணைய தளத்தில் கட்டணமின்றி போட்டி தேர்வு பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x