அக்.,15 முதல் பள்ளிகள் திறப்பு: பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்..

அக்.,15ம் தேதி முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க, வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வுகளை வெளியிட்டுள்ள மத்திய அரசு அக்.,15 முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்தது. இதுகுறித்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் முடிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிப்பில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்த முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதாவது:

  • மாணவர்கள் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும்
  • மாணவர் வருகைப் பதிவேட்டில் நெகிழ்வுத் தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
  • ஆன்லைன் வகுப்புகள் தேவையெனில் அதனை மாணவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
  • பள்ளியில் வகுப்பறைகள், கழிப்பறைகள், பள்ளி வளாகம் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவை, கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
  • பள்ளிகளில் தனிமனித இடைவெளி அவசியம்.
  • எல்லா நேரங்களிலும், ஆசிரியர்களும், மாணவர்களும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.
  • கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தனிமனித இடைவெளி குறித்த பலகைகள், பேனர்களை பள்ளிகளில் வைக்க வேண்டும்.
  • என்.சி.இ.ஆர்.டி., சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள, மாற்றுக் கல்வி அட்டவணையைப் பின்பற்றி, முழுக் கல்வி ஆண்டுக்கும், விரிவான கல்வி அட்டவணையைப் பள்ளிகள் உருவாக்க வேண்டும்.
  • பள்ளிகளில் அவசரகால உதவிக் குழு, சுகாதாரப் பரிசோதனைக் குழு உருவாக்கப்பட வேண்டும்.
  • அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசின் வழிகாட்டல்களைப் பின்பற்றிச் சொந்தமாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.
  • கொரோனா காலத்தில் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்க, சூடாகச் சமைக்கப்பட்ட மதிய உணவு அல்லது அதற்கு ஈடான ஊக்கத் தொகை வழங்க வேண்டும்.
  • பள்ளியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டால், ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x